How to protect your computer from viruses & malware (தமிழ்)


உங்களது operating system ஆன Windows, Mac, Ubuntu போன்றவற்றை காலத்திற்கு ஏற்றார் போல் Software மற்றும் security up to date செய்து புதுப்பித்த நிலையில் வைத்தல் .

ஒரு பிரபலமானதும் பாதுகாப்பானதுமான வைரஸ் எதிர்ப்பு செய்நிரலை (anti-virus software) பயன்படுத்துதல் மற்றும் அதை Updated நிலையில் வைத்திருத்தல் .

சந்தேகத்திற்கு இடமான மின்னஞ்சலை ( Mail ) திறப்பதையோ அல்லது தெரியாத மூலங்களிலிருந்து வரும் இணைப்புகளை கிளிக் செய்வதையோ தவிர்த்தல்.

Fairwall என்று அழைக்கப்படும் தீ சுவர் மென்பொருளை பயன்படுத்தி அங்கீகரிக்கப்படாத அனுமதி இன்றிய கணணி நுழைவுகளை தடுத்தல்.

திருட்டு மென்பொருள் என்று அழைக்கப்படும் pirate softwares , அதாவது மாற்றி அமைக்கப்பட்ட மென்பொருட்களை பாதுகாப்பு அற்ற தலங்களில் இருந்து Download செய்வதை தவிர்த்தல் .

இணையத்திலிருந்து இலவச மென்பொருட்களை பதிவிறக்கம் செய்யும்போது மிகவும் எச்சரிக்கையாக இருத்தல் வேண்டும் ஏனென்றால் அவ்வாறான இலவச மென்பொருட்களுடன் உங்கள் கணினியை அளிக்கக்கூடிய malwares / virus இருக்கக்கூடும் .

தேவையற்ற விளம்பரங்கள் மற்றும் pop-up களை தடுப்பதற்காக pop up blocker ஐ பயன்படுத்தவும் .

உங்கள் இணைய இணைப்பை குறியாக்க(encrypt) மற்றும் உங்கள் தனிப்பட்ட தகவல்களை பாதுகாக்க VPN (மெய்நிகர் தனியார் நெட்வொர்க்கை) ஐ பயன்படுத்தவும்.

குறிப்பாக இலவச public Wi-Fi இணைப்புகளை பயன்படுத்துவதை தவிர்க்கவும். ஏனென்றால் அவை பாதுகாப்பு குறைந்ததாக காணப்படும்.

ஒருவேளை கணினிகளில் பழுதுகள் ஏற்பட்டால் அவற்றிலிருந்து உங்கள் தரவுகளை காக்க உங்களது முக்கியமான கோப்புகளை அடிக்கடி backup செய்து வைத்துக் கொள்வது சிறந்தது.

Post a Comment

0 Comments